The Indian Times

ஞாபகம் வருதே..படித்த கல்லூரிக்கு சென்று மலரும் நினைவுகளை பெற்ற நடிகர் நெப்போலியன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன்.இவர் வெள்ளித்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் வாய்ப்பு தேடி அலைந்த பொழுது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி 1991 ஆம் ஆண்டு வெளியாகிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாக நடித்து வந்தார்.கதாநாயகன் மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமாவை அசத்திவந்தார்.இவர் வில்லனாக நடித்த எஜமான் படம் மாபெரும் வரவேற்பினை இவருக்கு சினிமாவில் பெற்றுக்கொடுத்தது. இவர் நடித்த சீவலப்பேரி பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று 90 களில் முன்னணி நடிகராக உருவெடுத்து தமிழ் சினிமாவை வலம் வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நெப்போலியன் தமிழ் படங்களில் நடிப்பது குறைவாக உள்ளது.தனது முழு கவனத்தினையும் பிசினஸில் செலுத்தி வருகிறார்.இதனால் தற்போது அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார்.இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு நடிப்பினால் மக்கள் மனதினை கவர்ந்தார் நெப்போலியன்.அமெரிக்காவில் இருக்கும் இவர் படவாய்ப்பு வந்தால் கதையினை கேட்டு பிடித்திருந்தால் தமிழகத்திற்கு வந்து நடிப்பார்.அப்படி இவர் நடித்து அண்மையில் வெளியாகிய படம் ஹிப்ஹாப் தமிழா நடித்த அன்பறிவு திரைப்படம்.இவர் அமெரிக்காவில் இருந்து இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவிடும் வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

Advertisement

இவர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் தான் படித்த கல்லூரிக்கு சென்று மலரும் நினைவுகளை அசைபோட்டுள்ளார்.திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜோசப் கல்லூரியில் தான் நெப்போலியன் கல்வி பயின்றுள்ளார்.நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கல்லூரிக்கு சென்று அங்கு சுற்றிப்பார்த்து ஆசிரியர்களுடன் பேசி மகிழ்ந்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in