உன்னால முடிஞ்சத செய்டா…..நடிகர் அதர்வா மிரட்டும் TRIGGER ட்ரைலர்

பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா.அப்பாவை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நடிகராக களம் இறங்கியவர் இவர்.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார்.அப்பாவை வைத்து சினிமாவுக்குள் வந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இந்த இடத்தினை அடைந்துள்ளார் அதர்வா.பானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர்.முதல் படமே நல்ல வரவேற்பினை ரசிகர்களுக்கு பெற்றுக்கொடுத்தது.அறிமுக படம் என்பது போல் இல்லாமல் நடித்த அனுபவம் உள்ளது போல இப்படத்தில் பட்டையை கிளப்பினார் அதர்வா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நவராத்திரிக்கு நடிகை அமலாபால் ஈஷா மையத்தில் சாமி தரிசனம்

உன்னால முடிஞ்சத செய்டா.....நடிகர் அதர்வா மிரட்டும் TRIGGER ட்ரைலர் 1

விளம்பரம்

ஈட்டி,சண்டிவீரன்,இமைக்கா நொடிகள் மற்றும் பரதேசி என பல வெற்றிப்படங்களை தமிழில் கொடுத்துள்ளவர்.தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளது.வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதில் இவர் கில்லாடி,பல வித்தியாசமான கதைகளில் நடித்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை வைத்துள்ளார் அதர்வா. இவர் அண்மையில் பிரபல இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் சில நாட்களுக்கு முன்னாள் வெளியாகியது.ஆனால் எதிர்பார்த்த வரவேற்பினை இப்படம் பெறவில்லை

கட்டாயம் படிக்கவும்  40வயதில் திருமணம் செய்த அன்பே ஆருயிரே பட நாயகி மீரா

உன்னால முடிஞ்சத செய்டா.....நடிகர் அதர்வா மிரட்டும் TRIGGER ட்ரைலர் 2

விளம்பரம்

இந்நிலையில் அதர்வாவுக்கு அடுத்ததாக இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ட்ரிக்கர் படம் வெளியாக உள்ளது.ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியாகிய 100 படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது,அந்த வரிசையில் இப்படமும் போலீஸ் கதாபாத்திரத்தினை மையமாக கொண்டு அமைந்துள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை படக்குழுவுக்கு தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அந்நியன் பட நாயகி சதா 40வயதிலும் 20 வயது போல இளமையில் கலக்கும் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment