The Indian Times

ROMANTIC POSE கொடுக்க செல்வராகவன் படும் பாடு இருக்கே….செம்ம காமெடி

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன்.இவர் இயக்கும் திரைப்படத்திற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவரது ஆயிரத்தில் ஒருவன் படம் மற்றும் புதுப்பேட்டை படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.இவர் முதன் முதலில் இயக்கிய படம் காதல் கொண்டேன்.தனுஷ் நடிப்பில் உருவாகிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இவர் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் நானே வருவேன் என இரண்டு படங்களை நடிகர் தனுஷ் வைத்து இயக்கி வருகிறார்.

Advertisement

இயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது நடிகராகவும் களம் இறங்கி இருக்கிறார் செல்வராகவன்.பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.இப்படத்தில் நடிகர் செல்வராகவனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.அதனை தொடர்ந்து சாணிக்காயிதம் படத்தில் நடிப்பில் பிரித்தெடுத்திருந்தார்.மேலும் இயக்குனர் மோகன் இயக்கத்தில் தற்போது பகாசுரன் படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றிருந்தது

Advertisement

நடிப்பு இயக்கம் என இருந்தாலும் குடும்பத்துடனும் செல்வராகவன் நேரத்தினை செலவிட்டு தான் வருகிறார்.தற்போது இவரது மனைவி செல்வராகவன் ரொமேன்டிக் போஸ் கொடுக்க கஷ்டப்பட்ட புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்துள்ளனர்,ரொமேன்டிக் போஸ் கொடுக்க முயற்சி செய்து இறுதியில் சாதாரணமாக புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் காதல் படம் எடுத்த இயக்குனருக்கே காதலிக்க வரவில்லையா என கிண்டல் அடித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in