The Indian Times

தளபதி அடிச்சு ஓட்டுங்க … யோகிபாபுவுடன் RIDE சென்ற தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் தனது அடுத்த படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்தார் விஜய்.இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கிய வாரிசு திரைப்படம் அண்மையில் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படம் வெளியாகி 11 நாட்களில் உலகம் முழுவதும் 250கோடியை தட்டி தூக்கியுள்ளது.

Advertisement

தற்போது இப்படப்பிடிப்பில் எடுத்த வீடியோ ஒன்றை யோகி பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோவில் தளபதி விஜய், யோகி பாபு மற்றும் படக்குழுவினருடன் காரில் ரவுண்டு அடித்துள்ளார்.அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை யோகி பாபு தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவை பார்த்த ரசிகர்கள் தளபதி வண்டி ஓட்டுற அழகே தனி என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.வீடியோ தற்போது பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in