The Indian Times

வாத்தி படப்பிடிப்பில் பாரதிராஜாவுக்கு கால் அமுக்கி விடும் தனுஷ்… தங்கமான மனுஷன்யா தனுஷ்… வாத்தி MAKING VIDEO

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில்நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தெலுங்கில் சார் படத்திலும் நடித்து வருகிறார்.அண்மையில் தனுஷ் நடிப்பில் உருவாகிய நானே வருவேன் படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்ததுதற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இப்படத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகி இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த வீடியோவில் பாரதி ராஜா அருகே அமர்ந்து அவருக்கு கால் அமுக்கி விட்டு பாசமாக பேசியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா அனைவர் முன்னிலையிலும் பாரதிராஜாவுக்கு இவ்வளவு பெரிய நடிகர் கால் அமுக்கி விடுகிறாரே,பெரியவர்களை எப்படி மதிக்கணும்னு தனுஷை பார்த்துதான் காத்துக்கிடனும்,ரொம்ப நல்ல மனுஷன்ப்பா இவரு என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in