The Indian Times

மோதி பாத்துருவோமாடா.. அதர்வா அடித்து காலி பண்ணும் “பட்டத்து அரசன்” TRAILER இதோ!!

முன்னணி நடிகர் முரளியின் மகன் அதர்வா.தந்தையை போல சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தார்,காத்தாடி விடும் சிறுவனாய் பானா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி முதல் படத்திலேயே பட்டையை கிளப்பினார் அதர்வா. இப்பட்ட்டத்தினை தொடர்ந்து பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து தமிழ் சினிமாவில் நிரந்தர நடிகராக உருவெடுத்தார். ஈட்டி,சண்டிவீரன்,இமைக்கா நொடிகள் மற்றும் பரதேசி என பல வெற்றிப்படங்களை தமிழில் கொடுத்துள்ளவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் அண்மையில் நடித்து வெளியாகிய சில படங்கள் இவருக்கு பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது,இதனால் மீண்டும் நல்ல படங்களை கொடுக்க முயற்சி செய்து வருகிறார் அதர்வா.மேலும் கதைகளையும் நன்கு உன்னிப்பாக கவனித்து கேட்டு நடித்து வருகிறாராம்.தற்போது இவர் இயக்குனர் சற்குணத்துடன் கைகொடுத்து மீண்டும் கிராமத்து இளைஞனாக பட்டத்து அரசன் படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார்.இவர்களுடன் ஆர் கே சுரேஷ்,ராதிகா சரத்குமார்,ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது,தற்போது இன்று இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : Think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in