The Indian Times

CWC புகழ் மற்றும் பென்சிக்கு ENGAGEMENT….மெஹந்தி-லாம் வச்சு பொண்ணு ரெடி ஆகிட்டாங்க

வாழ்க்கையில் கடுமையாக போராடி இன்று முன்னேறியுள்ளவர் புகழ்.முயற்சி செய்தால் எதுவும் முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம் . சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னை வந்த புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் வாய்ப்புகளை தேடி கடுமையாக போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் சிறிய வேடத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை பயன்படுத்தி விஜய்டிவியில் அடியெடுத்து வைத்தார் புகழ்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என தனது முழுத்திறமைகளையும் காண்பித்து புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார்.அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.வாய்ப்பு கிடைத்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

Advertisement

இவர் அண்மையில் பென்ஸ் ரியா என்பவரை காதலித்து வருவதாகவும் பல ஆண்டுகளாக தாங்கள் காதல் செய்து வருவதாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் புகழ். தற்போது புகழுக்கும் அவரது காதலி பென்ஸ் ரியாவுக்கும் நிச்சயம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வழக்கமாக பெண்கள் விசேஷங்களில் தான் மெகந்தி போடுவது உண்டு இந்நிலையில் புகழின் காதலி பென்ஸ்ரியா தற்போது ஒரு கையில் புகழின் முகத்தினை மேகெந்தியாக போட்டுள்ளார்.மேலும் மெகந்தி போட்ட பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களது மிகப்பெரிய நாளுக்காக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என கூறி பதிவிட்டுள்ளார்.இதன்மூலம் இருவருக்கும் நிச்சயம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in