The Indian Times

ஐயோ முடியலையே…GYM-ல் WORKOUT செய்ய முடியாமல் அவதிப்பட்ட VJ பார்வதி…

பிரபல யூடியூப் தொகுப்பாளினி பார்வதி.வித்தியாசமான கேள்விகளை மக்களிடம் கேட்டு நகைச்சுவையாக பேச கூடியவர் இவர்.மேலும் பிரபலங்களையும் பேட்டி எடுப்பதில் இவர் வல்லவர் ஆவார்.அதன்படி ஹிப் ஹாப் ஆதியை ஒருமுறை பேட்டி எடுக்கும்பொழுது,பார்வதியை ஹிப் ஹாப் ஆதி ஆன்டி என கூறினார்.இந்த வீடியோ மிக பெரிய அளவு வைரலாகி பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் விஜே பார்வதி.மதுரையை சேர்ந்த இவர் தனது கடின முயற்சிகளினால் இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது,அதிலும் ஒரு சில எபிசோட்களில் கோமாளியாக வந்து அசத்தினார்.பின்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து முழுவதும் விலகி விட்டு தொகுப்பாளர் வேலையே தொடர்ந்து செய்து வருகிறார் பார்வதி.எப்பொழுதும் கலகலப்பாக காமெடியாகவும் பேசும் பார்வதிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிவகுமாரை சபதம் என்ற படத்தின் மூலம் நடிகையாகவும் தற்போது உருவெடுத்துள்ளார்.இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.தற்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.மேலும் சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்து அடிக்கடி வீடியோக்களை வெளியிடுகிறார்.தற்போது இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய முடியாமல் அவதிப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.அந்தளவிற்கு பார்வதி போராடியுள்ளார் உடற்பயிற்சி செய்ய முடியாமல் இங்கு என்னை பொருட்களை துடைக்க வைத்துவிடாதீர்கள் எனவும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை தற்போது பெற்றுள்ளது

https://www.youtube.com/watch?v=XbSPTxYqYYw&feature=youtu.be

Embed video credits : GALATTA 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in