The Indian Times

இளையராஜா ,ஏ ஆர் ரஹ்மான் பாடலுக்கு PIANO இசைத்து அசத்திய பாடகர் திருமூர்த்தி

சில வருடங்களுக்கு முன்னர் கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இதனை கண்ட இசையமைப்பாளர் இமான் அவரை கண்டுபிடித்து அவருக்கு தனது இசையில் பாடல் பாட வாய்ப்பினை வழங்கினார்.அண்மையில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் குலசாமி என்ற பாடலை இவர் பாடியுள்ளார்.இப்பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது.இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய சீறு படத்தில் செவ்வந்தியே என்ற பாடலை பாடி பாடகராக அறிமுகம் ஆகினார்.நன்றாக பாடியும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தலை பத்தலை பாடலை குடத்தில் இசையமைத்து இவர் பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ மிகப்பெரிய அளவு இணையத்தில் வைரலாகியது.அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பயிற்சி பள்ளியில் முறையாக இசை கற்பதற்கு தேவையான செலவுகளை செய்துள்ளார்.இந்த வீடியோ பெருமளவு வைரலாகி பல மக்களிடமும் சென்றடைந்தார் திருமூர்த்தி.நிச்சயம் இவருக்கு இதற்கு பின்னர் நிறைய சினிமா பாடல் பாட வாய்ப்புகள் கிடைக்கும் என தோன்றுகின்றது

Advertisement

இந்நிலையில் இதன்மூலம் பாடல் பாடுவதில் மட்டுமில்லாமல் இசையமைப்பதிலும் திருமூர்த்திக்கு ஆர்வம் உள்ளது தெரிகிறது.இந்நிலையில் தற்போது இவர் பியானோ வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.இதில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிய முன்பே வா அன்பே வா என்ற பாடலுக்கும் இளையராஜாவின் பாடலுக்கும் பியானோவில் இசையமைத்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பலரும் இவரை பாராட்டியும் மேலும் மேலும் உயரவேண்டும் என கூறி வாழ்த்தியும் வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in