The Indian Times

கஜினி பட கல்பனா போல சுட்டித்தனம் செய்யும் நடிகை அசின் மகள்

2000களில் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை அசின்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இன்று வரை உள்ளது.இவர் முதன் முதலில் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமாவிற்குள் நுழைந்தார்.பின்னர் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.தமிழில் சரியான அறிமுகத்திற்காக காத்திருந்த வேளையில் எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழில் முதல் படத்திலேயே வெற்றியை கொடுத்ததால் தொடர்ந்து பல தமிழ் படங்கள் வாய்ப்பு அசினுக்கு வர தொடங்கியது. கமல்,அஜித்,விஜய்,சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கஜினி படத்தில் நடித்தார்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவரது சினிமா வாழ்க்கையில் கஜினி இவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது.இவர் தமிழ்,தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தியிலும் பல படங்கள் நடித்து அசத்தியுள்ளார்.

Advertisement

தற்போது இவர் சினிமாவில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.இவருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.தற்போது தனது குழந்தை பள்ளியில் படிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அப்படியே அசின் போலவே இவர் மகள் இருக்கிறாரே என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.மேலும்சிலர் கஜினி படத்தில் வரும் கல்பனா போலவே குறும்பாக உள்ளார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in