The Indian Times

SJ SURYA நடிப்பை பார்த்து வயிறு குலுங்க சிரித்த சிவகார்த்திகேயன்…DON GUN PRANK MAKING VIDEO

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் டான்.இப்படத்தினை சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் படத்தினை தமிழகத்தில் வெளியிட்டுள்ளார்.படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி,மனோபாலா ,சிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த படம் கடந்த மாதம் மே 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து அசத்தியிருந்தார்.இப்படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு மற்றும் கருத்துக்களை பெற்றது.ஒரு கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்குமோ எல்லாமே இப்படத்தில் துல்லியமாக காட்டியுள்ளனர்.இதுவும் இப்படம் வெற்றியடைய ஒரு காரணம் ஆகும்.தற்போது உலகம் முழுவதும் 100கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது டான்.

Advertisement

இப்படம் முழுவதும் காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்துள்ளதால் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து படத்தினை கொண்டாடினர்.இப்படத்தில் இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் துப்பாக்கியை கொண்டு வந்து எஸ் ஜே சூர்யாவை பயமுறுத்துவார்.இதில் எஸ் ஜே சூர்யா பயப்படுவதை பார்த்து திரையரங்கமே விழுந்து சிரித்தது.அப்படி ஒரு நகைச்சுவை கலந்த காட்சியாக வந்தது.இந்த சீனுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த காட்சியின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த வீடியோவில் எஸ் ஜே சூர்யா கெஞ்சுவது போன்ற நடிப்பை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் சிரித்துள்ளார்.

Embed video credits : sivakarthikeyan productions

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in