22வது திருமண நாளை கொண்டாடும் சரத்குமார் மற்றும் ராதிகா… வீடியோ வெளியிட்டு நெகிழ்ந்து போன சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

நடிகர் சரத்குமார் 90 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் .பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.ஆரம்பத்தில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக நடித்து அசத்தி மக்களை கவர்ந்தார்.வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி சினிமாவையே அசத்தினார்.1990 ஆம் ஆண்டு புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சரத்குமார்.தனது கடின முயற்சியினால் கிடைக்கும் வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சரத்குமார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

22வது திருமண நாளை கொண்டாடும் சரத்குமார் மற்றும் ராதிகா... வீடியோ வெளியிட்டு நெகிழ்ந்து போன சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் 1

விளம்பரம்

இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தந்தது.மேலும் அதனை தொடர்ந்து மூவேந்தர் சூர்யவம்சம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்தமாக கட்சி வைத்து அரசியலிலும் கால் தடம் பதித்து அசத்தி வருகிறார்.தற்போதும் தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்

22வது திருமண நாளை கொண்டாடும் சரத்குமார் மற்றும் ராதிகா... வீடியோ வெளியிட்டு நெகிழ்ந்து போன சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் 2

விளம்பரம்

அண்மையில் வெளியாகிய தளபதி விஜயின் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இவர் நடிகை ராதிகாவுடன் 22வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதுவரை அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படத்தினை வீடியோவாக செய்து அதனை பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார்.மேலும் அந்த பதிவில் இது எங்கள் வாழ்வின் நீண்ட பேரின்பப் பயணம், அன்பின் பயணம், புரிதலின் பயணம், தியாகங்களின் பயணம், ஒற்றுமையின் பயணம்.என கூறி காதல் வசனங்களை பேசி அசத்தியுள்ளார்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment