இயக்குனர் சுதா கொங்கராவுக்கு கையில் பலத்த அடி.. கட்டுடன் அவரே வெளியிட்ட தகவல்

சினிமா உலகில் குறைந்த அளவே பெண் இயக்குனர்கள் உள்ள நிலையில் அதில் முன்னோடியாக திகழ்பவர் இயக்குனர் சுதா கொங்காராவ்.இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் இயக்கி உள்ளார்.கடந்த 2010 ஆம் ஆண்டு துரோகி என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்றுத்தரவில்லை.தனது அடுத்தப்படத்திற்காக கடுமையாக உழைக்க தொடங்கியவர் இறுதியாக 2016 ஆம் ஆண்டு இறுதி சுற்று படத்தினை இயக்கினார்.இப்படம் மாபெரும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

இயக்குனர் சுதா கொங்கராவுக்கு கையில் பலத்த அடி.. கட்டுடன் அவரே வெளியிட்ட தகவல் 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் சினிமாவில் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார்.அதன்பின்னர் இவர் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய சூரரைப்போற்று படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது சுதா இப்படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்து எடுத்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பி இருக்கிறது,இப்படத்திற்கு பின்னர் இவர் மீண்டும் நடிகர் சூர்யாவை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

கட்டாயம் படிக்கவும்  இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட் புகைப்படங்கள்

இயக்குனர் சுதா கொங்கராவுக்கு கையில் பலத்த அடி.. கட்டுடன் அவரே வெளியிட்ட தகவல் 2

விளம்பரம்

இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்காராவ்க்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது,கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவு செய்துள்ளார் சுதா.மேலும் தனது கையில் அடிபட்டுள்ளதால் ஒரு மாதம் ஓய்வு எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படம் இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் அவர் சீக்கிரம் உடல்நலம் பெற வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கயல் சீரியல் நாயகி சைத்ராவின் 29வது பிறந்தநாள் கொண்டாட்டம்

இயக்குனர் சுதா கொங்கராவுக்கு கையில் பலத்த அடி.. கட்டுடன் அவரே வெளியிட்ட தகவல் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment