The Indian Times

அப்பா உன் கை SOFT.. என்னோட கை தான் HARD.. ராக்கி பாயிடமே வம்பிழுத்த மகன் … செம்ம CUTE VIDEO

கேஜிஎப் படத்தின் மூலம் கன்னட சினிமா மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் யாஷ்.2018 ஆம் ஆண்டு வெளியாகிய இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.இப்படம் கொரோனா நிலவரத்தினால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தள்ளி சென்ற நிலையில் இறுதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகியது.5 மொழிகளில் வெளியாகிய இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது யாஷ் தனது அடுத்த பட வேலைகளை பார்க்க தொடங்கியுள்ளார்.இப்படமும் பாண் இந்திய படமாக இருக்கும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இப்படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் நடிகர் யாஷ்.மேலும் அதே சமயம் கேஜிஎப் 3ஆம் பாகத்திலும் நடிக்க உள்ளார் யாஷ் ,இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே அறிவித்திருந்தது.இந்நிலையில் நடிகர் யாஷ் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

வீடியோவில் யாஷ் தனது மகனுடன் விளையாடியுள்ளார்,அவர் மகன் அப்பா யாஷ் கைகளை தொட்டு பார்த்துவிட்டு ரொம்ப சாஃப்ட் -ஆ இருக்கு என்னோட கைதான் கடினமாக இருக்கு என கூறி விளையாடியுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடடே ராக்கி பாயிடமே வம்பு இழுக்கிறார் அவர் மகன் என கூறி கேலி செய்து வருகின்றனர். வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in