குமுதா,அவங்க அம்மா அவங்க ஆயா எல்லாரும் HAPPYதான்.. ஏன்டா டேய்… ரசிகர்களிடம் நகைச்சுவையாக பேசிய விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி பல சினிமா ரசிகர்களை கவர்ந்த கலைஞன்.இவரின் நடிப்பு என்ற கலைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் நடிகனாக அசத்தி வரும் முன்னனி கலைஞன்.ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாய் வந்த விஜய் சேதுபதி இன்று அவரின் படத்தினை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.கதாநாயகனாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி கொடுக்கும் கதாபாத்திரத்தினை உள்வாங்கி வெளுத்துக்கட்ட கூடிய திறமை உள்ளவர் இவர்.இந்த படம் ஓடாது என தெரிந்தும் அதில் நடித்தால் அந்த அறிமுக இயக்குனர் இயக்குனராக மாறிவிடுவார் என்று பல படங்களில் ஒப்புக்கொண்டு பிறரை இயக்குனராகவும் மாற்றியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

குமுதா,அவங்க அம்மா அவங்க ஆயா எல்லாரும் HAPPYதான்.. ஏன்டா டேய்... ரசிகர்களிடம் நகைச்சுவையாக பேசிய விஜய் சேதுபதி 1

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பினை பெற்று 66 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது,இப்படத்தினை தொடர்ந்து விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இன்று பலரின் மனதினையும் கவர்ந்துள்ளார்.கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.ரஜினி,கமல்ஹாசன் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தும் மிரட்டிவிட்டார்.தற்பொழுது மலையாளம்,ஹிந்தி,தெலுங்கு என்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய் சேதுபதி.

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

குமுதா,அவங்க அம்மா அவங்க ஆயா எல்லாரும் HAPPYதான்.. ஏன்டா டேய்... ரசிகர்களிடம் நகைச்சுவையாக பேசிய விஜய் சேதுபதி 2

விளம்பரம்

தற்போது இவர் ஹிந்தியில் இயக்குனர் ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் பார்சி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகனாக ஷாஹித் கபூர் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் ராசி கண்ணா,ரெஜினா கேசென்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். படக்குழு இதனை வெப் சீரியசாக உருவாக்கியுள்ளது.அமேசான் பிரேமில் இந்த சீரிஸ் ஆனது பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் விளம்பரத்திற்காக கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் செம்ம ஜாலியாக பேசியுள்ளார்,அதில் கூட்டத்தில் இருந்த ஒருவர் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என கூற உடனே விஜய் சேதுபதி குமுதா,அவங்க அம்மா அவங்க ஆயா எல்லாரும் HAPPYதான் என நகைச்சுவையாக பதில் கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : FILMIBEAT TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment