The Indian Times

என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே – வாரிசு படத்தின் “அம்மா” பாடல் வீடியோ வெளியாகியது

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம் ஆகும்.இதற்காகவே தளபதி வைத்து இயக்க பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் விஜய் வீட்டு வாசலில் காத்துக்கிடக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது

Advertisement

விஜய் தற்போது தெலுங்கிலும் கால் தடம் பதித்துள்ளார்.இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் நேரிடையாக பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். தளபதிக்காக தமன் பார்த்து பார்த்து இசையமைத்து இருக்கிறார்

Advertisement

இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்துள்ளது,அதிலும் குறிப்பாக அம்மா பாடல் தான் அனைவரது இதயத்தினையும் தொட்டுள்ளது.இப்பாடல் வீடியோ சாங் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது படத்தின் வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது,படக்குழு. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த பாடலை கேட்கும் பொழுது அம்மா நியாபகம் அதிகமாக வருவதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : T series tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in