The Indian Times

இரவின் நிழல் RESPONSE…தேம்பி அழுத BRIGIDA..பார்த்திபன் சாருக்கு நன்றியோடு இருப்பேன் என பேட்டி

ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியவர் பிரிகிடா.இந்த தொடரின் மூலம் பலரின் கவனத்தினையும் ஈர்த்து பலரது மனதிலும் இடம் பிடித்தார்.இவரது நடிப்பு மற்றும் பேச்சு பலரையும் இவரது ரசிகையாக்கியது.எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மட்டும் கொண்டு முன்னேறி தற்போது வெள்ளித்திரையில் தோன்றும் அளவிற்கு வளர்த்துள்ளார்.நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல்முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் நடிகர் பார்த்திபன் எழுதி,இயக்கி நடிக்கும் இரவின் நிழல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

Advertisement

சென்னையில் காலை 5 மணி முதலே காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் படத்தினை பார்த்து வருகின்றனர்.படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் படத்தினையும்,பார்த்திபனையும் பாராட்டி வருகின்றனர்.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரிகிடா திரையரங்கிற்கு இன்று அதிகாலை வரவே மக்கள் கொடுத்த ஆதரவினை பார்த்து அழுது விட்டார்.மேலும் இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு பார்த்திபன் சாருக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன் என தெரிவித்துள்ளார்

Embed video credits : CINEULAGAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in