The Indian Times

Private party பாடலுக்கு பாவாடை தாவணியில் மிரட்டல் நடனம் போட்ட மௌனராகம் ரவீனா

2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் ரவீனா.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா.

Advertisement

நடனத்தின் மீது அதிக விருப்பம் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இவர் முதன் முதலாக ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார்.தற்போது மௌனராகம் நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரவீனா.இவரின் இன்ஸ்டா நடனத்திற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டான் படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய பிரைவேட் பார்ட்டி என்ற பாடல் பெரும் ஹிட் அடித்தது.இந்த பாடலுக்கு பிரபலங்கள் தொடர்ந்து நடனமாடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்த நிலையில் தற்போது ரவீனாவும் பாவாடை தாவணியில் மிரட்டல் நடனம் போட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in