Trend-க்கு வந்த BIGGBOSS தாமரை..கணவருடன் நடனமாடி வீடியோ வெளியிட்ட THAMARAI

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் அறிமுகமாகினார்.பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Trend-க்கு வந்த BIGGBOSS தாமரை..கணவருடன் நடனமாடி வீடியோ வெளியிட்ட THAMARAI 1

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் மல்லு கட்டினார்.இங்கும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

Trend-க்கு வந்த BIGGBOSS தாமரை..கணவருடன் நடனமாடி வீடியோ வெளியிட்ட THAMARAI 2

விளம்பரம்

தற்போது இவர் தனது கணவர் உடன் நடனமாடி வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் அக்கா நீங்க ரொம்ப நல்ல ஆடுறீங்க,சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.தாமரையும் தற்போது பிற பிக் பாஸ் போட்டியாளர்களை போல் நடனம் ஆடி வீடியோ பதிவிட ஆரம்பித்துள்ளார்,இனி இவரிடம் இருந்து அசத்தல் நடனங்களை நாம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை தவிர்த்து இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணலாம்

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment