The Indian Times

ஏப்ரல் 14 இல்லை..அதுக்கு முன்னாடியே படம் ரிலீஸ் ஆகுது..சன் பிக்சர்ஸ்-ன் மாஸ் அறிவிப்பு | Beast

தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் பீஸ்ட். எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதியை Official ஆக அறிவித்துள்ளது படக்குழு. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜயக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து செல்வராகவன், யோகி பாபு, வி.டி.வி கணேஷ், கிங்ஸ்லி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். “தளபதி 65” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட விஜய்யின் நடிக்கும் 65வது படத்தின் தயாரிப்பு உரிமையை சன் பிக்சர்ஸ் 2020 ஜனவரி தொடக்கத்தில் வாங்கியது. Twitter Original Source from:  Sun Pictures

Advertisement

முதலில் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் பிறகு ஏற்ப்பட்ட குழப்பங்களால் நெல்சன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் வேற லெவலில் ஹிட் அடித்துள்ளதால் தளபதி விஜயை வைத்து இவர் இயக்கியுள்ள இந்த படத்திக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தில் “அரபிக் குத்து” என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.
அந்த பாடல் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியாகி இருந்தது. அதற்குள் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த பாடல் இதுவாக தான் இருக்கும். Youtube Video Code Embed Credits: IndiaGlitz

Advertisement

பிறகு இந்த படத்தில் ஜாலியோ ஜும்கானா என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர் படக்குழு. விஜய், நெல்சன், அனிருத் ஆகிய அனைவரும் கூலாக கோவா பீச்சில் இருப்பது போல சட்டையை அணிந்து கொண்டு ஆடும் வீடியோ அரபிக் குத்து சாதனையை முறியடித்துள்ளது. வெளியான இரண்டே நாட்களில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில் படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னதாகவே வெளியாகிறது. அந்த செய்தியை நீங்களும் காண..Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in