The Indian Times

ஜெயிக்கணும் மாப்ள…ஜெயிச்சே ஆகணும்….நடிகர் அதர்வா தெறிக்கவிடும் குருதி ஆட்டம் TRAILER

பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா.அப்பாவை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நடிகராக களம் இறங்கியவர் இவர்.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார்.அப்பாவை வைத்து சினிமாவுக்குள் வந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இந்த இடத்தினை அடைந்துள்ளார் அதர்வா.பானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர்.முதல் படமே நல்ல வரவேற்பினை ரசிகர்களுக்கு பெற்றுக்கொடுத்தது.அறிமுக படம் என்பது போல் இல்லாமல் நடித்த அனுபவம் உள்ளது போல இப்படத்தில் பட்டையை கிளப்பினார் அதர்வா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஈட்டி,சண்டிவீரன்,இமைக்கா நொடிகள் மற்றும் பரதேசி என பல வெற்றிப்படங்களை தமிழில் கொடுத்துள்ளவர்.தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளது.வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதில் இவர் கில்லாடி,பல வித்தியாசமான கதைகளில் நடித்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை வைத்துள்ளார் அதர்வா.தற்போது இவர் பிரபல இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்,பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பெரும் இடைவெளிக்கு பிறகு முழுக்கு முழுக்க அதர்வா ஆக்ஷனில் இறங்கியுள்ளார்.இந்த ட்ரைலெர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பாடல் வெற்றிபெற ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : Five star audio

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in