படிப்பு என்பது பிரசாதம் மாதிரி..கொடுங்க..அத விக்காதிங்க| VATHTHI TEASER

.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினத்தின் அரிய புகைப்படங்கள் இதோ

படிப்பு என்பது பிரசாதம் மாதிரி..கொடுங்க..அத விக்காதிங்க| VATHTHI TEASER 1

விளம்பரம்

இப்பாடலின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் சினிமாவில் கொடிகட்டி பறக்க தொடங்கினார்.தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற நடிகர்கள் சிலர் அதில் இவரும் ஒருவர்.அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் உயர்ந்துள்ளார் மேலும் பாலிவுட்டில் இருந்து தற்போது ஹாலிவுட்டிற்கு சென்று அங்கேயும் கலக்கு கலக்கி வருகிறார் தனுஷ் ,அவெஞ்சர்ஸ் பட இயக்குனர் இயக்கத்தில் இவர் நடித்த க்ரே மேன் சில தினங்களுக்கு முன்பு நெட்பிளிக்ட்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவருக்கு அடுத்ததாக சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்

கட்டாயம் படிக்கவும்  விடுதலை படத்தின் ஒன்னோட நடந்தா VIDEO SONG வெளியாகியது

படிப்பு என்பது பிரசாதம் மாதிரி..கொடுங்க..அத விக்காதிங்க| VATHTHI TEASER 2

விளம்பரம்

தற்போது நடிகர் தனுஷ் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழில் வாத்தி என வெளியாக உள்ளது.முதல் முறையாக தனுஷ் நடிப்பில் இரண்டு மொழிகளில் உருவாகும் படம் இது ஆகும்.சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் இப்படத்தினை இணைந்து தயாரித்து வருகின்றனர்.மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் தோட்டப்பள்ளி மது.சமுத்திரக்கனி,நரேன்,என பலரும் நடித்துள்ளனர்.ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் இன்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் பிச்சைக்காரனாக மிரட்டும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 TRAILER இதோ

விளம்பரம்

Embed video credits : SITHARA ENTERTAINMENT

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment