The Indian Times

சர்பட்டா பரம்பரை படத்தின் Teaser | Arya | PA Ranjith

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் இறுதியாக டெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் குழந்தைகளை அதிகம் கவர்ந்ததோடு , மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது ஆர்யா சர்பட்டா பரம்பரை என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் அந்த காலத்தில் இருந்த குத்துசண்டை கலாச்சாரத்தை பற்றி எடுக்கப்பட்டுள்ளது.இந்த படத்திற்காக ஆர்யா கடுமையான உடல் பயிற்சி மேற்கொண்டு தன்னுடைய உடம்பை மாவீரன் போல் வலுவேற்றியுள்ளார். அந்த உடல் பயிற்சி வீடியோக்களையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

Advertisement

இதை தொடர்ந்து படத்தில் நடிகர் கலையரசன் , பசுபதி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மற்றுமொரு டீசர் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி ஓ.டி.டியில் வெளியாகவுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in