The Indian Times

SURIYA 40 First Look Announcement Teaser | Suriya | Pandiraj | Sun pictures

இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பார்ப்பவர் நடிகர் சூர்யா. ஆரம்பகாலங்களில் வந்த பல விமர்சனங்களை உடைத்தெறிந்து இன்று தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகனாக இருப்பவர் சூர்யா. இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகியிருந்தாலும், இந்திய சினிமாவையே திரும்பிப்பார்க்க வைத்த தமிழ் படம் சூரரை போற்று.

இதை தொடர்ந்து தற்போது சூர்யா மிகவும் பிசியாக உள்ளார்.தற்போது இவர் நவரசா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கும் கிட்டார் கம்பி மேலே என்ற கதையில் சூர்யா நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் இந்த வெப் தொடர் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தங்களில் வைரலானது. அதை தொடர்ந்து தற்போது சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 40 திரைப்படத்தின் first look எப்போது வெளியாகிறது என்ற announcement வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வருகிற ஜூலை 22 சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 40 திரைப்படத்தின் first look வெளியாகவுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in