The Indian Times

செம்ம MODERN-ஆக மாறிய நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா… கதாநாயகியாக நடிக்க போறாங்களோ?

தமிழ் சினிமாவை வில்லனாகவும்,கதாநாயகனாகவும் கலக்கிய நடிகர் சத்யராஜ். இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.1978 ஆம் ஆண்டு சட்டம் என் கையில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் சத்யராஜ். அப்பொழுதே ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு வில்லனாக கலக்கு கலக்கியவர்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாவிலும் படங்கள் நடித்து வருகிறார்.

Advertisement

அண்மையில் இவர் கட்டப்பாவாக நடித்த பாகுபலி படம் பெரும் வரவேற்பினை உலகளவு பெற்றது.இதனை தொடர்ந்து பல மொழிகளிலும் பிரபலம் ஆகினார் சத்யராஜ்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடித்து படத்தினை தாங்குவதில் இவர் வல்லவர். இவருக்கு சிபிராஜ் என்ற மகனும் ,திவ்யா என்ற பெண்ணும் உள்ளார்.சிபிராஜ் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார்.மகள் திவ்யா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

Advertisement

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் செம்ம மாடர்ன் ஆக புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.கதாநாயகிகளுக்கே போட்டியாகும் அளவிற்கு கியூட் ஆக உள்ளார் திவ்யா.இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அட சூப்பர் எப்பொழுது ஹீரோயின் ஆக போறீங்க என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in