The Indian Times

விருமன் படத்தின் பூஜை video | Suriya | Karthi | Shankar

Watch the video below தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இந்தியன், முதல்வன், சிவாஜி, ஐ, எந்திரன் என பல பிளாக்பஸ்டர் திரைபடங்களை கொடுத்த பிரபல இயக்குனர் ஷங்கர். அப்பாவின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஷங்கரின் மகள் முதன் முறையாக ஹீரோயினாக அறிமுகமாகிறார்.கொம்பன் படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையாவுடன் மீண்டும் ‘விருமன்’

திரைப்படத்தில் நடிகர் கார்த்தியும் இணைகிறார். இந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக முன்னனி இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நடிகையாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இயக்குனர் முத்தையாவுடன் கைகோர்க்கும் முதல் படம் இதுவாகும். Watch the video below

Advertisement

சூர்யா-ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மன்ட் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த மாதம் 18 ஆம் தேதியில் தேனி மாவட்டத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் பூஜை வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in