The Indian Times

அழகூரில் பூத்தவளே பாடலை அருமையாக பாடிய சிவாங்கி… சேலையில் தேவதை போல வந்து பாடி அசத்தியதால் ரசிகர்கள் கிறக்கம்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.

Advertisement

இன்ஸ்டாகிராமில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அந்தளவிற்கு வைரலாவது உண்டு.சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வருகின்றனர்.இவர் தற்போது சேலையில் ரசிகர்களுக்காக அழகூரில் பூத்தவளே என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நாளல்ல வரவேற்பினை பெற்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in