The Indian Times

VFX காட்சிகள் இல்லை… அதிக RISK எடுத்து நடித்த அஜித்குமார்.. துணிவு பட நடிகர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகியது.

Advertisement

தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்தவர் வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோவில் க்ரீன் ஸ்க்ரீன் இல்லை,கிராபிக்ஸ் காட்சிகள் இல்லை அனைத்து ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் அணைத்தும் உண்மையானவையே என படப்பிடிப்பில் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் கடுமையான உழைப்பினை பாராட்டி வருகின்றனர்.மேலும் அண்மையில் வெளியாகிய தளபதியின் வாரிசு படத்தில் அதிக கிராபிக்ஸ் காட்சிகளை காண்பித்தனர்,அதனை கிண்டலடிக்கும் விதமாக துணிவு நடிகரின் பதிவு இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/vishwanath9796/status/1624238308678320130?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1624238308678320130%7Ctwgr%5E72003ea0137c7209e0c3804d97a1997bfb0b5531%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fthunivu-movie-climax-is-not-vfx-1676088806

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in