மாமா சீக்கிரம் வாங்க உங்களுக்காக கேக் வச்சிருக்கேன்..கணவன் சினேகனுக்கு பிறந்தநாள் Surprise அளித்த கன்னிகா சினேகன்

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த பாடல்களை தொடர்ந்து மக்களிடம் மிக பிரபலம் ஆனவர் ஆகினார் சினேகன்.இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாமனார் மாமியாருக்கு ஆயுள் விருத்தி வேண்டி திருக்கடையூர் கோவிலில் பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி

மாமா சீக்கிரம் வாங்க உங்களுக்காக கேக் வச்சிருக்கேன்..கணவன் சினேகனுக்கு பிறந்தநாள் Surprise அளித்த கன்னிகா சினேகன் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகனுக்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை மணமுடித்துக்கொண்டார்.இவரும் சின்னத்திரையில் நடிகர் ஆவார்.கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் கன்னிகா.அதன்பின்னர் சரித்திரம் பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். சத்ரபதி,தேவராட்டம்,அடுத்தசாட்டை என்று பல படங்களில் நடித்துள்ளார் இவர்.அண்மையில் திருமுருகன் இயக்கத்தில் கல்யாண வீடு தொடரில் கதாநாயகியாக நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  கயல் சீரியல் நாயகி சைத்ராவின் 29வது பிறந்தநாள் கொண்டாட்டம்

மாமா சீக்கிரம் வாங்க உங்களுக்காக கேக் வச்சிருக்கேன்..கணவன் சினேகனுக்கு பிறந்தநாள் Surprise அளித்த கன்னிகா சினேகன் 2

விளம்பரம்

சினேகன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.பல ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில்,அவரது மனைவி கன்னிகா அவருக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.அவருக்காக புத்தகம் மற்றும் பேனாக்கள் வடிவில் கேக் தயார் செய்து கணவருக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கு இவரது ரசிகர்கள் சினேகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கருத்து பதிவிட்டு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment