The Indian Times

விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடும் SURIYA JOTHIKA…கப்பல் ஓட்டி அசத்திய சூர்யா

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.ஆரம்ப கட்டத்தில் சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்,இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் மேலும் இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக உள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழத்தொடங்கினர்.இவர்களுக்கு தேவ் என்ற மகன் மற்றும் தியா என்ற மகள் உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க ஈடுபாடு காட்டாமல் ஜோதிகா குடும்பத்தினையும் குழந்தைகளையும் கவனித்து வந்தார்,பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கணவர் சூர்யாவின் அனுமதி மற்றும் அவர் அளித்த உற்சாகத்தின்படி மீண்டும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து அசத்தி வருகிறார்.ஜோதிகா நடிக்கும் பல படங்களை சூர்யாவே தயாரிக்க தொடங்கிவிட்டார்.தற்போது தமிழ் சினிமாவில் சூர்யாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது உச்சநட்சத்திரமாக உள்ளார்.அதேபோல் ஜோதிகாவும் தற்போது முன்னணி நடிகையாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.ஜோதிகா எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும்,சூர்யாவை பற்றி புகழ்ந்து தான் பேசுவார்,அந்த அளவிற்கு சகணவர் சூர்யாவின் மீது காதல்.இவர்களை போல கணவன் மனைவி வாழ வேண்டும் என எடுத்துக்காட்டு சொல்லும் அளவிற்கு இருவரும் மகிழ்ச்சியாக தங்களது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

தற்போது சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் மகன் மகளுடன் இணைந்து வெளிநாடு சென்று அங்கு விடுமுறையை கொண்டாடி வருகிறார்.விடுமுறையில் இவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த விடுமுறையில் ஜோதிகா பெரும் சாகசங்களை செய்துள்ளார்.மேலும் சூர்யா குடும்பத்தினருடன் ஆற்றில் படகு ஒட்டியுள்ளார்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இவரது மகள் தியா எடிட் செய்துள்ளார்.இதனை ஜோதிகா வீடியோ பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in