The Indian Times

மலையில் இருந்து சரிந்து வந்த நடிகர் செந்தில் காரை தாங்கி பிடித்து காப்பாற்றிய VIJAY TV தங்கதுரை..

விஜய் தொலைக்காட்சியில் சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆகி இன்று பலருக்கும் பிடித்த பிரபலமாக இருப்பவர் தங்கதுரை.தனது நகைச்சுவை திறமையால் மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் இவர்.இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கோமாளியாக மக்களை சிரிக்க வைப்பார்.இவரின் நகைச்சுவையை கண்டு பயந்து ஓடாதவர்கள் எவரும் இல்லை,அதுவே இவரை அதிகமாக ரசிக்கும்படி செய்கிறது.பயோ டெக்னலாஜி படித்திருந்தாலும் கலை மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேடி சின்னத்திரைக்குள் நுழைந்தார் தங்கதுரை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

டிவிக்களில் மட்டும் மக்களை சிரிக்க வைக்காமல் வெளியூர்களில் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை மகிழ்விப்பார் தங்கதுரை.இவரை பலர் கலாய்த்தாலும்,இவரது ஜோக்குகளை பற்றி தவறாக பேசினாலும் எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் அதையும் நகைச்சுவையாக மாற்றும் நல்ல குணம் கொண்டவர் தங்கதுரை.இவரை அனைவரும் முதலில் டைகர் கார்டன் தங்கதுரை என்று தான் அழைப்பார்கள் காரணம் இவர் சென்னை புளியந்தோப்பில் வசித்து வருவதால்.கல்லூரியில் படிக்கும் பொழுதே ஸ்டாண்ட்அப் காமெடி,கானா பாடல் என பல திறமைகளை தன்னுள் கொண்டவர்.

Advertisement

தற்போது சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருகிறார்.தற்போது இவர் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் செந்தில் மற்றும் பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தில் தங்கதுரை நடித்து வருகிறார்.படப்பிடிப்பில் மலையில் இருந்து கார் வருவது போல் இவர் அதை தாங்கி பிடிப்பது போல் நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இதற்கு இவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி கொடுத்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in