The Indian Times

கட்டாயம் பண்ணுங்க…ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த SUPER STAR ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.என்னதான் தற்போது மிக பெரிய நடிகர்களாக இருந்தாலும் ஆரம்பத்தில் பல அடிகள்,அவமானங்கள் ஆகியவைகளை பெற்றுத்தான் இன்று சினிமாவில் உயர்ந்துள்ளார்.தற்போது இவர் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்

Advertisement

இந்த வீடியோவில் ரஜினிகாந்த் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நம்ம நாடை வணங்கும் விதமாக,நம்ம ஒற்றுமையை காட்டும் விதமாக,இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ பேர் இறந்திருக்காங்க,சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக ஜாதி,மதம்,கட்சிகளை தவிர்த்து சிறு கம்பில் தேசிய கொடியை கட்டி வீட்டிற்கு முன் பறக்க விடுவோம் என கோரிக்கை வைத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in