முதல்நாளே கல்லா கட்டிய விருமன்….கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? விருமன் முதல்நாள் வசூல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கார்த்தி.இயக்குனர் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படம் பெரும் வரவேற்பினை இவருக்கு தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார் கார்த்தி.பின்னர் தொடர்ந்து தமிழில் வித்தியாசமான படங்களில் நடித்து பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை தனது வசம் சேர்த்தார்.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கொம்பன்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.பருத்திவீரன் படத்திற்கு பிறகு கிராமம் சார்ந்த படம் கொம்பன் என்பதால் பெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

முதல்நாளே கல்லா கட்டிய விருமன்....கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? விருமன் முதல்நாள் வசூல் 1

விளம்பரம்

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார்.நடிகர் சூர்யா இப்படத்தினை தயாரித்துள்ளார்.யுவன் சங்கர் ராஜ இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சுரேஷ் ,சூரி,மைனா நந்தினி,ராஜ்கிரண் என பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.சண்டை காட்சிகள்,பேமிலி செண்டிமெண்ட் என படத்தில் எல்லாம் கலந்து கலவையாக உள்ளது.அதிகாலை 4 மணிக்கே ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டு ரசிகர்கள் படத்தினை கண்டு களித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

முதல்நாளே கல்லா கட்டிய விருமன்....கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? விருமன் முதல்நாள் வசூல் 2

விளம்பரம்

படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இப்படம் தமிழகத்தில் நேற்று மட்டும் சுமார் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது கார்த்தி நடித்த படத்தில் அதிக கலெக்ஷன் எடுத்த படம் விருமனாக அவருக்கு அமைந்துள்ளது.முன்னதாக சுல்தான் படம் முதல் நாளில் 5கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்த நிலையில் அந்த சாதனையை முறியடித்துள்ளது விருமன்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment