The Indian Times

ICE CREAM-ஐ வாங்க போராடும் நடிகர் ஜெயம் ரவி மகன்…அண்ணே கொடுங்க ப்ளீஸ்

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.இவருக்கு அடுத்ததாக பூலோகம் எனும் படத்தினை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கிய அகிலன் படம் விரைவில் வெளியாக உள்ளது.அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது

Advertisement

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.அதில் முதல் மகன் உடன் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார்.தந்தையை போலவே அவரது மகனும் இப்படத்தில் நடிப்பில் அசத்தினார்.இவரது இரண்டாவது மகன் ஆன அயன் ரவி கடையில் ஐஸ் க்ரீம் வாங்க கடைக்காரரிடம் போராடியுள்ளார்.இந்த வீடியோவை ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அயன் செய்வதை பார்க்கும்பொழுது நகைச்சுவையாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வீடியோவை லைக் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in