The Indian Times

அருணாச்சலம் ரஜினியாக மாறி அலப்பறை செய்த விஜய் டிவி புகழ்

வாழ்க்கையில் கடுமையாக போராடி இன்று முன்னேறியுள்ளவர் புகழ்.முயற்சி செய்தால் எதுவும் முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம் . சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னை வந்த புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் வாய்ப்புகளை தேடி கடுமையாக போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் சிறிய வேடத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை பயன்படுத்தி விஜய்டிவியில் அடியெடுத்து வைத்தார் புகழ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என தனது முழுத்திறமைகளையும் காண்பித்து புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார்.அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

Advertisement

தற்போது சினிமாவில் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாய் வெள்ளித்திரையை தற்போது கலக்கி வருகிறார்.மேலும் கதாநாயகனாக ஜூ கீப்பர் என்கிற படத்திலும் நடித்து அசத்தி வருகிறார் புகழ்.பல முன்னணி கதாநாயகர்கள் படத்திலும் நடித்து அசத்திவிட்டார் புகழ்.தற்போது புகழ் குதூகலம் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவருடன் அபிராமியும் நடித்து வருகிறார்.படப்பிடிப்பில் அருணாச்சலம் ரஜினி போல நடித்து மாஸ் செய்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in