The Indian Times

நடிகர் விஜய் தேவர்கொண்டா ASSISTANT-ஆல் காயமடைந்த தொகுப்பாளினி DD

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா.இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே தெலுங்கில் உள்ளது.அறிமுகமாகிய சில வருடங்களிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் விஜய் தேவர்கொண்டா .தெலுங்கு சினிமாவில் 2011 ஆம் ஆண்டு வெளியாகிய நுவிலா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் வரிசையாக தெலுங்கில் நடிக்க தொடங்கினார்.எந்த படமும் சரியான வாய்ப்பினை பெற்று தராத நிலையில் ஒரு நாள் வெற்றிபெறுவோம் என போராடினார்.அவர் போராட்டத்திற்கும் கடின உழைப்பிற்கும் பலனாய் அர்ஜுன் ரெட்டி அமைந்தது.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை தெலுங்கு சினிமாவில் கொடுத்துள்ளார்.தற்போது குஷி எனும் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.இந்நிலையில் தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லிகர் படத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.காரணம் இப்படத்தில் இவருக்கு வில்லனாக பிரபல குத்துசண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார்.குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

Advertisement

இப்படத்திற்காக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் தேவர்கொண்டா கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி DD தொகுத்து வழங்கினார்.இந்நிலையில் விஜய் தேவர்கொண்டாவை காண ரசிகர்கள் கூட்டம் அதிகம் வந்ததால் அவரது உதவியாளர் ரசிகர்களை தாக்கியும்,பிடித்து இழுத்தும் முரட்டு தனமாக நடந்துகொண்டுள்ளார்.மேடையில் செல்பி எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது உதவியாளர் ரசிகரை சட்டையை பிடித்து இழுக்கவே அவர் அருகே இருந்த தொகுப்பாளினி டிடி கையில் மோதியுள்ளார்.இதனால் டிடி வலியில் கத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in