The Indian Times

“JAI BHIM” Suriya 39 first look poster | Suriya

இன்று நடிகர் சூர்யா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள் மற்றும் பல நடிகர் நடிகைகள் , பிரபலங்கள் சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். சூர்யா இந்த நிலைக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டங்களை தாண்டி வந்திருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். இன்றைய தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களுள் இவரும் ஒருவர்.

இந்நிலையில் சமீப காலமாக சூர்யா ரசிகர்களுக்கு சூர்யா நடிக்கும் படங்களின் அப்டேட் வரிசையாக வந்து கொண்டிருக்கிறது. நவரசா வெப் தொடரில் சூர்யா நடிக்கும் கிட்டார் கம்பி மேலே நின்று பாடங்கள் வரிசையாக வெளிவந்தது. இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின்

Advertisement

டைட்டில் லுக் வெளியானது. இது போக நேற்று சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா 40 படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் first look வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது சூர்யா 39 படமான படத்தின் first look வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஞானவேல் இயக்க 2டி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in