The Indian Times

TAANAKKARAN Official Teaser | Vikram prabhu

வாரிசு அரசியல் போல் சினிமாவிலும் வாரிசு நடிகர்கள் அறிமுகமாவது வழக்கம் தான். ஆனால் தன் அப்பா தொட்ட உயரத்திற்கு வருகிறார்களா இல்லையா என்பது தான் முக்கியமான ஒன்றாக பார்க்க படுகிறது. அந்த வரிசையில் உச்சம் தொட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரபு. ஒரு காலத்தில் மிக சிறந்த ஹீரோவாக இருந்த நடிகர் பிரபு தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இருப்பினும் மக்கள் மனதில் இன்றுவரை நீங்கா இடம் பிடித்துள்ளார் இவர். இவரை தொடர்ந்து இவரது மகன் விக்ரம் பிரபு கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மிக பெரிய அளவில் வெற்றிபெற்றது. அதை தொடர்ந்து இவன் வேறமாதிரி , சிகரம் தோடு , இது என்ன மாயம் போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்திருந்தாலும் , அதன் பிறகு இவர் நடித்த பெரும்பாலும் படங்கள் தோல்வியில் தான் முடிந்தது.

Advertisement

இவர் இறுதியாக புலி குத்தி பாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இவர் டாணாக்காரன் என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் first look போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in