நீங்க இல்லாம நான் இல்லை… ரசிகர்களை கையெடுத்து கும்பிட்ட தல அஜித்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையே அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ரம்ஜான் கொண்டாடி வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்

நீங்க இல்லாம நான் இல்லை... ரசிகர்களை கையெடுத்து கும்பிட்ட தல அஜித் 1

விளம்பரம்

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது 61வது படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் சிறிய இடைவெளிக்கு பிறகு கலந்துகொண்டுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

நீங்க இல்லாம நான் இல்லை... ரசிகர்களை கையெடுத்து கும்பிட்ட தல அஜித் 2

விளம்பரம்

சென்னையில் அஜித் படப்பிடிப்பு நடந்து வருவதை தெரிந்துகொண்ட ரசிகர்கள் கூட்டம் கூடினர்.அஜித் தனது ரசிகர்கள் வந்திருப்பதை அறிந்து கேரவேனில் இருந்தபடியே ரசிகர்களுக்கு கையசைத்து நன்றி கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் இன்ஸ்டாகிராம் ட்வீட்டர் பக்கத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் வந்ததை அறிந்து அஜித் அவர்களை சந்தித்தது ரசிகர்களின் பாராட்டுக்களுக்கு உரியதாக அமைந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment