The Indian Times

முதல் நாளே BOX OFFICE-ஐ தெறிக்கவிட்ட சர்தார்… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அப்பா,அண்ணனை போல் தானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என துணை இயக்குனராக மணிரத்தினத்திடம் பணியாற்றினார்.பின்னர் நடிகராக களம் இறங்கிவிட்டார்.முதல் படமே பெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகராக கார்த்தியை உருவாக்கியது.

Advertisement

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பையா படத்தில் நடித்தார்.அப்படமும் பெரும் ஹிட் கொடுத்தது இவருக்கு.இவ்வாறு தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பட்டியலில் கார்த்தியும் குறுகிய காலத்திலேயே இணைந்தார்.தற்போது இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி சர்தார் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்.இவர்களுடன் லைலா மற்றும் ரித்விக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது

Advertisement

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளது.பல திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ.4.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in