The Indian Times

பிறந்தநாள் அன்று கதறி அழுத VIJAY TV அறந்தாங்கி நிஷா…

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசத்தி அறிமுகம் ஆகியவர் அறந்தாங்கி நிஷா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பவர் இவர்.பலர் தன்னை கேலி செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைப்பவர்.நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

Advertisement

இவர் அண்மையில் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.மேலும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று தனது பிறந்தநாளுக்கு உணவளித்துள்ளார்.மேலும் அங்குள்ள குழந்தைகளை கண்டும் கண் கலங்கி உள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமில்லாமல் இவ்வாறு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து உதவிய மனப்பான்மையை பாராட்டியும் வருகின்றனர்

Embed video credits : Karuppu Roja

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in