The Indian Times

NEGATIVE REVIEWS வந்தாலும் கோடிகளில் குவியும் வசூல்..  பிரின்ஸ் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்துக்கு அடுத்து முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினையே கவர்ந்துள்ளார் இவர்.மெரினா படத்தின் மூலம் சாதாரண கதாநாயகனாக அறிமுகம் ஆகி இன்று இவரது படங்கள் 100கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

Advertisement

பல ஆண்டுகளாக நடித்து வரும் எவராலும் இத்தகைய வசூலை குறுகிய காலகட்டத்தில் பெற முடியாத நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து 10 வருடங்களில் அதனை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கிலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார்.காரணம் டாக்டர் படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்பதால்.தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.சிவகார்த்திகேயனின் கடந்த இரண்டு படங்களான டாக்டர் மற்றும் டான் 100 கோடி வசூல் சாதனை செய்தது.இந்நிலையில் இப்படமும் 100 கோடி வசூலை பெரும் என எண்ணி இருந்த நிலையில் படு மோசமான விமர்சனங்களை ரசிகர்களிடம் இப்படம் பெற்றுள்ளது.இருப்பினும் வசூலில் சக்கை போடு போடுகிறது பிரின்ஸ்.அதன்படி தமிழகத்தில் முதல் நாளில் இப்படம் ரூ.6 கோடி வரை வசூலை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.12 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in