The Indian Times

மிருதங்கம் வாசித்து அசத்தும் இயக்குனர் வெங்கட் பிரபு… என்ன இருந்தாலும் இசைக்குடும்பம் இல்லையா

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா படம் பெரும் வரவேற்பினை பெற்று இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து புதிய படத்தினை இயக்கி வருகிறார்.இவர் என்னதான் இயக்குனர் ஆக இருந்தாலும் இளையராஜா குடும்பம் என்பதால் இவருக்கும் இசை ஒட்டிக்கொண்டது.இவரது தம்பி பிரேம்ஜியும் நடிகர் மட்டும் இல்லாமல் சினிமாவில் இசையமைப்பாளர் ஆகவும் உள்ளார்.

Advertisement

தற்போது இவர் மிருதங்கம் வாசிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் வெங்கட் பிரபு மிருதங்கம் வாசிக்க கற்றுக்கொண்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இவரின் திறமையை பாராட்டி வருகின்றனர்.மேலும் இசையை கற்றுக்கொண்டு யுவன் சங்கர் ராஜாவுக்கு போட்டியாக வந்தாலும் வருவார் போல என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in