The Indian Times

Bike Race Event ல் Mass காட்டிய தல அஜித்! Viral Video

தமிழ் நாட்டிற்கே தல என்று கூறினாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது தல அஜித். பல கோடி ரசிகர்களை வைத்திருக்கும் தமிழ் சினிமா நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இவர் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த கூட்டணியில் நேர்கொண்ட பார்வை அமோக வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து இந்த படத்திற்கும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Advertisement

சமீபத்தில் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் நாங்க வேற மாறி பாடல் வெளியாகி வைரலானது. தற்போது இந்த படத்தின் டீசர் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வலிமை திரைப்படம் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த மற்றும் சிம்புவின் மாநாடு என இரண்டு பெரியப்படங்கள்

Advertisement

தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வமும் சந்தேகமும் அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்நிலையில் தல அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக , தல அஜித் கலந்துகொண்ட பைக் ரைட் ஈவென்ட் வீடியோ வெளியாகியுள்ளது. தல அஜித் நடிப்பில் மட்டுமல்ல பைக் ரேஸ் , கார் ரேஸ் என கலக்கக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=0Ybp7rZs14E

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in