The Indian Times

” Chef அ மாத்திட்டாங்களா?” நீயா நானா கோபிநாத்தை கலாய்த்த தங்கதுரை ! Mr &Mrs சின்னத்திரை ப்ரோமோ

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும்.

Advertisement

இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ நடைபெற்று முடிந்தது. இந்த சீசன் விண்ணீராக கனி குக்கு வித் கோமாளி பட்டத்தை தட்டி சென்றார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து mr &mrs சின்னத்திரை யை துவங்கியுள்ளது விஜய் டிவி. இதில் குக்கு வித் கோமாளி சரத் மற்றும் அவரது மனைவி, குக்கு வித் கோமாளி தீபா அவர்களது கணவர் , என பல ஜோடிகள் இந்த mr &mrs சின்னத்திரை சீசனில் கலந்து கொள்கின்றனர். அதிலும் இந்த வார ப்ரோமோ வில் mr &mrs சின்னத்திரை ஸூக்கு வித் கோமாளி செட்டில் நடக்கவுள்ளதாக தெரிகிறது.

Advertisement

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தங்கதுரையும் கலந்து கொண்டு குக்கு வித் கோமாளியில் என்னென்ன ரகளைகள் செய்தாரோ அதே போல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் தொந்தரவு செய்கிறார். தற்போது குக்கு கோமாளி முடிந்து விட்டது என்று ரசிகர்கள் சோகமாக இருக்கும் சமயத்தில் இந்த ப்ரோமோ அவர்களுக்கு ஆறுதலாளித்துள்ளது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in