வசூலில் சக்கைபோடு போடும் வாரிசு மற்றும் துணிவு… யார் முதலிடம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் இரண்டுபெரும் தூண்கள் என்று சொன்னால் அது விஜய் மற்றும் அஜித் மட்டுமே.சூப்பர் ஸ்டார் உலகநாயகனுக்கு பிறகு இவர்கள் தான் ஆரோக்கியமான போட்டியாளர்களாக சினிமாவில் வலம் வருகின்றனர்.இவர்களுக்கு இடையே எந்த போட்டியோ பொறாமையோ இல்லை,ஆனால் இவர்களில் யார் பெரியவர் என்ற போட்டி இருவரது ரசிகர்களிடமும் உள்ளது.இவர்களின் படம் தனி தனியாக வெளியாகும் பொழுதே இப்படி என்றால் ஒரே நாளில் வெளியானால் என்னவாகும் என்பதை போல தற்போது பல ஆண்டுகள் கழித்து இருவரது படங்களும் மோதி உள்ளது

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

வசூலில் சக்கைபோடு போடும் வாரிசு மற்றும் துணிவு... யார் முதலிடம் தெரியுமா? 1

விளம்பரம்

இதுவரை அஜித் விஜய் படங்கள் மோதியதில் அதிகம் விஜய் படம் தான் வெற்றிபெற்றுள்ளது.ஆனால் இந்த முறை இருவருமே தங்களது படத்தில் மிரட்டியுள்ளனர்.இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.அதன்படி அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.துணிவு காலை 1 மணி முதல் காட்சிகளை திரையரங்கு ஆரம்பித்துள்ளது.அதேபோல் வாரிசு படமும் அதிகாலை 4 மணி முதல் காட்சிகள் தொடங்கியது.இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  TEENZ ட்ரைலர் இதோ

வசூலில் சக்கைபோடு போடும் வாரிசு மற்றும் துணிவு... யார் முதலிடம் தெரியுமா? 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளது.அதன்படி துணிவு வெளியாகிய முதல் நாளில் தமிழகத்தில் ரூ.25 கோடி வசூலை பெற்றுள்ளது.அதே சமயம் வாரிசு முதல் நாளில் தமிழகத்தில் ரூ.22 கோடியை பெற்று பின் தங்கியுள்ளது.,மேலும் வரும் நாட்களில் விடுமுறை என்பதால் மேலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது அதிகாரபூர்வ அறிவிப்பு  இல்லை ,விரைவில் கலெக்ஷன் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment