The Indian Times

பொண்ணுக்கு EGO ஈரோடு வரைக்கும் இருக்கு… ராஷ்மிக்காவை பங்கமாக கலாய்த்த தளபதி.. வாரிசு SNEAK PEEK

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.அதன்படி தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்துள்ளார்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும் சரத்குமார்,ஷாம்,பிரபு ,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertisement

இப்படத்தினை தளபதி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர். அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் காட்சிகளாக திரையரங்கில் ஓடி வருகிறது. மேலும் பல நாட்களுக்கு ரசிகர்கள் வாரிசுக்கு முன்னாடியே புக் செய்துள்ளனர்.படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,மேலும் வசூலிலும் முதல் நாள் தமிழகத்தில் 20 கோடிக்கு மேல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது படத்தில் இருந்து சில நிமிட காட்சிகளை வெளியிட்டுள்ளது படக்குழு.இந்த காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : MOVIE BUFF TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in