The Indian Times

ஆடுகளம் படத்தை நழுவவிட்ட திரிஷா! காரணம் என்ன தெரியுமா?

உருவத்தை வைத்து எடை போடாதே என்று பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். தன் உருவ தோற்றத்தால் பல விமர்சனங்களுக்குள்ளானாலும் இன்று தன் நடிப்பாற்றலின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களை கட்டியிழுத்து பல விருதுகளை குவித்த நடிகர் தனுஷ். இவர் இறுதியாக நடித்தபடம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் பெரியளவில் வெற்றி பெற்றது.

ஆனால் என்னதான் சொன்னாலும் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் அளவிற்கு இந்த படம் கிடையாது. வெற்றிமாறனோடு தனுஷ் கூட்டணி சேர்ந்தாலே அது எப்போதும் வெற்றிதான். அந்த வகையில் இவர்கள் இருவரின் கூட்டணியில் முதல் தேசிய விருது வென்ற திரைப்படம் ஆடுகளம்.

Advertisement

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்சீ நடித்திருப்பார். ஆனால் முதலில் இந்த படத்தில் ஹீரோயின்னாக ஒப்பந்தமான நடிகை த்ரிஷா தான்.

படத்தின் ஷூட்டிங் தொடங்கி த்ரிஷாவை வைத்து ஒரு சில காட்சிகளும் எடுக்கப்பட்டது. ஆனால் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் இந்த படத்தில் சரியாக ஷூட்டிங்கிற்கு வராமல் இருந்திருக்கிறார் என கூறப்படுகிறது.

இதனால் த்ரிஷாவிற்கு பதில் டாப்சீ இந்த படத்தில் நடித்தார். படமும் வெளியாகி மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in