The Indian Times

படம் செம்ம சூப்பர்.. குடும்பத்தோட கண்டிப்பா எல்லாரும் பார்க்கணும்… பகாசூரன் படத்தின் மக்கள் கருத்து

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் மோகன்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய திரௌபதி ,ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.மேலும் பெரும் விமர்சனங்களும் இப்படங்களுக்கு கிளம்பியது. இப்படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மோகன் ,இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடராஜனை வைத்து பகாசூரன் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை ஜி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் இவர்களுடன் நடிகர் ராதா ரவி,ராஜன்,சரவணன் சுப்பையா,குணநிதி ,மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் படத்திற்கு பிறகு முழுவதுமாக வில்லத்தனமான நடிப்பினை இப்படத்தில் காட்டியுள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

Advertisement

தற்போது இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படத்தினை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் படத்தினை புகழ்ந்து வருகின்றனர்.படம் ரொம்ப சூப்பரா இருக்கு குடும்பத்தோட கண்டிப்பா பார்க்கணும், பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகள் செல்போனில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் செல்போனால் ஏற்படும் ஆபத்தை அருமையாக படமாக்கியுள்ளார் மோகன் ஜி.என கூறி அவரை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.படத்தில் ஜாதி இருக்குன்னு சொல்லுறவங்கள எடுத்து காண்பிக்க சொல்லுங்க என படத்திற்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

Embed video credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in