The Indian Times

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் வானதியும் பூங்குழலியும் குறும்பு புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.

தற்போது மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தினை உருவாக்கியுள்ளார்.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இதில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர்கள் தான் வானதி மற்றும் பூங்குழலி

Advertisement

இப்படத்தில் வானதியாக நடிகை சோபிதாவும்,பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும் நடித்திருந்தனர்.இவர்கள் இருவருமே பொன்னியின் செல்வனை விரும்பும் கதாபாத்திரங்கள் ஆகும்.

தற்போது படப்பிடிப்பின் பொழுது அதே உடையுடன் இருவரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளனர்.அதன்படி இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நடிகை சோபித ரசிகர்களிடம் காண்பிக்க இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்,

இதனை பார்த்த ஐஸ்வர்யா வெக்கத்தில் ,இதை ஏன் பதிவிட்டாய் இதனை இந்த உலகமே பார்க்க கூடாது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் செய்திருந்தார்.

தற்போது இவர்கள் குறும்புத்தனமான எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in